< Back
மாநில செய்திகள்
பெரியகுளத்தில்மாரத்தான் போட்டி
தேனி
மாநில செய்திகள்

பெரியகுளத்தில்மாரத்தான் போட்டி

தினத்தந்தி
|
9 Oct 2023 12:15 AM IST

பெரியகுளத்தில் மாரத்தான் போட்டி நேற்று நடைபெற்றது.

பெரியகுளத்தில் மாரத்தான் போட்டி நேற்று நடைபெற்றது. 13 வயதுக்குட்பட்ட சிறுவர், சிறுமிகள், 13 முதல் 30 வயதுக்குட்பட்டோர் மற்றும் போலீசார் உள்பட 4 பிரிவுகளாக போட்டிகள் நடந்தன. ஒவ்வொரு பிரிவினருக்கும் குறிப்பிட்ட தூரம் நிர்ணயிக்கப்பட்டது. அந்த தூரத்தில் அவர்கள் மாரத்தான் ஓடினர். இதன் தொடக்க விழா தென்கரை கச்சேரி சாலையில் உள்ள வீச்சு கருப்பணசாமி கோவிலில் நடந்தது. போட்டியை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பிரவீன் உமேஷ் டோங்கரே தொடங்கி வைத்தார். இதில் ஏராளமானோர் கலந்து கொண்டு ஆர்வத்துடன் ஓடினர். பின்னர் போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது.

மேலும் செய்திகள்