< Back
மாநில செய்திகள்
பெரியகுளத்தில்சப்-இன்ஸ்பெக்டர் வீட்டில் திருட்டு
தேனி
மாநில செய்திகள்

பெரியகுளத்தில்சப்-இன்ஸ்பெக்டர் வீட்டில் திருட்டு

தினத்தந்தி
|
7 Jan 2023 12:15 AM IST

பெரியகுளத்தில் ஓய்வுபெற்ற சப்-இன்ஸ்பெக்டர் வீட்டில் திருடுபோனது.

பெரியகுளம் தென்கரை கச்சேரி ரோட்டை சேர்ந்தவர் முத்துசாமி (வயது 75). ஓய்வு பெற்ற போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர். கடந்த மாதம் இவர், தனது மனைவியுடன் வீட்டை பூட்டி விட்டு திண்டுக்கல் மாவட்டம், நத்தத்தில் உள்ள தனது மகன் வீட்டிற்கு சென்றுவிட்டார். இந்நிலையில் கடந்த 4-ந்தேதி இவர் வீட்டிற்கு வந்தார். அப்ேபாது வீட்டின் கதவில் இருந்த பூட்டு உடைக்கப்பட்டு திறந்து கிடந்தது. இதனால் அதிர்ச்சி அடைந்த அவர் உள்ளே சென்று பாா்த்தார். அப்போது வீட்டில் இருந்த 2 கியாஸ் சிலிண்டர்கள் மற்றும் அடுப்பு திருடுபோய் இருந்தது. இதுகுறித்து முத்துசாமி தென்கரை போலீசில் புகார் கொடுத்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து வீட்டில் திருடிய மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.

Related Tags :
மேலும் செய்திகள்