< Back
மாநில செய்திகள்
தேனி
மாநில செய்திகள்
பெரியகுளத்தில்சாக்கடை கால்வாய் அடைப்பை கைகளால் அகற்றிய தூய்மை பணியாளர்
|24 Sept 2023 12:15 AM IST
பெரியகுளத்தில் சாக்கடை கால்வாய் அடைப்பை தூய்மை பணியாளர் கைகளால் அகற்றினார்.
பெரியகுளம் புதிய பஸ் நிலையத்தில் அரசு போக்குவரத்துக் கழக பணிமனை அலுவலகம் உள்ளது. இந்த அலுவலகம் அருகே சாக்கடை கால்வாய் செல்கிறது. இந்த கால்வாயில் நேற்று முன்தினம் அடைப்பு ஏற்பட்டது. இந்த அடைப்பை நகராட்சி தூய்மை பணியாளர் முத்து என்பவர் உபகரணம் எதுவும் அணியாமல் வெறும் கையால் அகற்றினார். இதை அந்த வழியாக சென்ற பொதுமக்கள் பார்த்து வேதனை அடைந்தனர். இதுகுறித்து நகராட்சி சுகாதாரத்துறை அதிகாரிகளிடம் கேட்டபோது, நகராட்சி துப்புரவு தூய்மை பணியாளர்களுக்கு போதுமான கையுறை மற்றும் பாதுகாப்பு கவசம் கொடுக்கப்பட்டுள்ளது என்றனர். ஆனால் தூய்மை பணியாளர்கள் கையுறை அணிந்து பணியில் ஈடுபடுகிறார்களா என்று அதிகாரிகள் ஆய்வு மேற்கொள்ள வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.