< Back
மாநில செய்திகள்
தூத்துக்குடி
மாநில செய்திகள்
பாண்டவர்மங்கலத்தில் மழைநீர் சேகரிப்பு விழிப்புணர்வு போட்டி
|21 Jun 2023 12:15 AM IST
பாண்டவர்மங்கலத்தில் மழைநீர் சேகரிப்பு விழிப்புணர்வு போட்டி நடத்தப்பட்டது.
கோவில்பட்டி:
கோவில்பட்டியை அடுத்துள்ள பாண்டவர் மங்கலம் கிராமத்தில் நேரு யுவ கேந்திராவும், கஸ்தூரி பாய் காந்தி மகளிர் நற்பணி மன்றமும் இணைந்து மழை நீர் சேகரிப்பு விழிப்புணர்வு, பொது அறிவு வினாடி- வினா போட்டியை நடத்தின. நிகழ்ச்சிக்கு மாவட்ட இளைஞர் நல அலுவலர் ஞானசேகரன் தலைமை தாங்கினார். நிகழ்ச்சியில் மழைநீர் சேகரிப்பு விழிப்புணர்வு உறுதிமொழி எடுக்கப்பட்டது. மகளிர் மன்ற ஆலோசகர் விஜயன் வரவேற்றுப் பேசினார். நிகழ்ச்சியை முன்னிட்டு நடந்த விழிப்புணர்வு வினாடி- வினா போட்டியில் வெற்றி பெற்ற மாணவ- மாணவிகளுக்கு மாவட்ட இளைஞர் நல அலுவலர் பரிசு வழங்கினார்.