< Back
மாநில செய்திகள்
பந்தலூரில், சிறுத்தை நடமாட்டத்தால் பொதுமக்கள் பீதி

பந்தலூர் இண்கோ நகரில் சிறுத்தைப்புலி நடமாடும் காட்சி. 

நீலகிரி
மாநில செய்திகள்

பந்தலூரில், சிறுத்தை நடமாட்டத்தால் பொதுமக்கள் பீதி

தினத்தந்தி
|
18 Aug 2023 6:45 PM GMT

பந்தலூரில், சிறுத்தை நடமாட்டத்தால் பொதுமக்கள் பீதியடைந்துள்ளனர்.

பந்தலூர்: பந்தலூர் இண்கோ நகரில் ஏராளமான பொதுமக்கள் குடியிருந்து வருகின்றனர். இந்த பகுதி வனப்பகுதியை ஒட்டி உள்ளதால் சிறுத்தை உள்ளிட்ட வனவிலங்குகள் இரைதேடி குடியிருப்பு பகுதிகளுக்குள் புகுந்து நடமாடுவதும் கால்நடைகள், நாய்களை வேட்டையாடியும் அட்டகாசம் செய்து வருகின்றன. இந்தநிலையில் நேற்று முன்தினம் இரவு ஒரு சிறுத்தை இரைேதடி இண்கோ நகருக்குள் புகுந்து உறுமியவாறு அங்கும், இங்குமாக சுற்றி வந்துள்ளது. சிறுத்தைப்புலி நடமாடிய காட்சிகள் அப்பகுதியில் பொருத்தப்பட்ட கண்காணிப்பு கேமராவில் பதிவானது. மேலும் போதிய தெருவிளக்குகள் இல்லாததால் இரவு நேரத்தில் இண்கோ நகர் இருள் சூழ்ந்து காணப்படுகிறது. இதனால் இரவு நேரத்தில் சிறுத்தை உள்ளிட்ட வனவிலங்குகள் வந்தாலும் ெதரியாத அளவுக்கு உள்ளது.

இதன்காரணமாக அப்பகுதி பொதுமக்கள், சிறுத்தை பீதியில் இரவு நேரத்தில் வெளியே வராமல் வீ்ட்டிற்குள் முடங்கி உள்ளனர். மேலும் சிறுத்தையை கூண்டு வைத்து பிடித்து அடர்ந்த வனப்பகுதியில் விட வேண்டும் என்று கோரிக்கை வைத்தனர். அதன்படி தகவல் அறிந்த தேவாலா வனச்சரகர் சஞ்சீவி, வனகாப்பாளர் பரமேஸ்வரன் மற்றும் வனத்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து சிறுத்தை நடமாட்டத்தை கண்காணித்து வருகின்றனர். இதேபோல் எருமாடு அருகே மணல் வயல் பகுதியிலும் சிறுத்தை நடமாட்டம் உள்ளதால் வனவர் குமரன் உள்பட வனத்துறையினர் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

மேலும் செய்திகள்