< Back
மாநில செய்திகள்
திண்டுக்கல்
மாநில செய்திகள்
பழனியில் தறிகெட்டு ஓடி கடைக்குள் புகுந்த கார்
|11 Sept 2022 11:51 PM IST
பழனியில் கட்டுப்பாட்டை இழந்து தறிகெட்டு ஓடிய கார் கடைக்குள் புகுந்தது.
பழனி பாரதிநகரை சேர்ந்தவர் பிரசாந்த் (வயது 27). கூலித்தொழிலாளி. இன்று, இவர் தனது காரில் பழனியில் இருந்து கொடைக்கானல் நோக்கி சென்று கொண்டிருந்தார். தெற்கு கிரிவீதியில் உள்ள சோதனை சாவடி பகுதியில் சென்றபோது, திடீரென கட்டுப்பாட்டை இழந்த கார் தறிகெட்டு ஓடியது. பின்னர் சாலையோரத்தில் உள்ள கடைக்குள் புகுந்து விபத்துக்குள்ளானது. இதில் பிரசாந்த் லேசான காயம் அடைந்தார். கடையில் யாரும் இல்லாததால் உயிர் சேதம் தவிர்க்கப்பட்டது. இதுகுறித்து பழனி அடிவாரம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.