< Back
மாநில செய்திகள்
மாநில செய்திகள்
தேர்தல் ஆணையர் நியமனம் போன்று மற்ற விஷயங்களிலும் வேகம் காட்ட வேண்டும் - கி.வீரமணி
|25 Nov 2022 5:49 PM IST
தேர்தல் ஆணையர் நியமனம் போன்று மத்திய அரசு மற்ற விஷயங்களிலும் வேகம் காட்ட வேண்டும் என கி.வீரமணி கூறியுள்ளார்.
சென்னை,
திராவிடர் கழக தலைவர் கி.வீரமணி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
மத்திய அரசானது தேர்தல் ஆணையர், உறுப்பினர் பதவியை நிரப்பிய விதமும், வேகமும் குறித்து சுப்ரீம் கோர்ட்டின் அரசமைப்புச் சட்ட ஐவர் அமர்வு அடுக்கடுக்கான கேள்விகளை எழுப்பின. அரசு வக்கீலான அட்டர்னி ஜெனரல் பதிலும், சுப்ரீம் கோர்ட்டு நீதிபதிகளுக்கு அளித்த விளக்கமும், சுப்ரீம் கோர்ட்டு நீதிபதிகளின் கடும் அதிருப்திக்கு ஆளாக்கியுள்ளது.
தேர்தல் ஆணையர் நியமனம் தொடர்பாக விசாரணை நடந்து கொண்டிருக்கும் போதே, அருண்கோயல் தேர்தல் ஆணையராக நியமிக்கப்பட்டது எப்படி? அது தொடர்பான ஆவணங்களைத் தாக்கல் செய்யவில்லை. நியமன ஆணை அவசர அவசரமாக தரப்பட்டு, பொறுப்பேற்கிறார். இது மாதிரி வேகம், மற்ற விஷயங்களில் இல்லையே என்று வேதனையுடன் கேள்வி எழுப்புகிறோம்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.