< Back
மாநில செய்திகள்
மாநில செய்திகள்
"ஒரேநாளில் சென்னையில் சட்டவிரோத 34 பார்களுக்கு சீல்.." - வருவாய் துறையினர் அதிரடி
|2 Jun 2023 6:40 PM IST
சட்டவிரோதமாக செயல்பட்டுவரும் பார்களுக்கு சீல் வைக்கும் பணிகளை அதிகாரிகள் மேற்கொண்டு வருகின்றனர்.
சென்னை,
சென்னை புறநகர் பகுதிகளில் சட்டவிரோதமாக செயல்பட்டுவரும் பார்களுக்கு சீல் வைக்கும் பணிகளை அதிகாரிகள் மேற்கொண்டு வருகின்றனர். தாம்பரம், பல்லாவரம் பகுதிகளில் சட்டவிரோதமாக செயல்பட்டுவரும் மதுபான பார்களுக்கு சீல் வைக்கும் பணிகள் இன்று மதியம் முதல் தொடங்கி நடைபெற்று வருகிறது.
இதில் முதற்கட்டமாக, தாம்பரம், பல்லாவரம், வண்டலூர், திருப்போரூர் ஆகிய தாலுகாக்களில் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. தாம்பரத்தில் 27 பார்களுக்கும் பல்லாவரத்தில் 7 பார்களுக்கு வருவாய்த்துறை அதிகாரிகள் சீல் வைத்துள்ளனர்.
மேலும், சட்டவிரோதமாக செயல்பட்டுவரும் பல பார்களுக்கு சீல் வைக்கும் பணிகளை அதிகாரிகள் மேற்கொண்டு வருகின்றனர்.