< Back
மாநில செய்திகள்
மாநில செய்திகள்
நாமக்கல் மண்டலத்தில் முட்டை விலை 25 காசுகள் குறைந்து ரூ.4.20-ஆக நிர்ணயம்
|25 July 2022 3:18 PM IST
தேசிய முட்டை ஒருங்கிணைப்புக் குழுவின் நாமக்கல் மண்டல ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.
நாமக்கல்:
தேசிய முட்டை ஒருங்கிணைப்புக் குழுவின் நாமக்கல் மண்டல ஆலோசனைக் கூட்டம் அதன் தலைவா் தலைமையில் நடைபெற்றது. இதில், முட்டை விலை நிர்ணயம் தொடர்பாக பண்ணையாளர்களிடம் கருத்துகள் கேட்கப்பட்டன.
மற்ற மண்டலங்களில் விலையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளதாலும், ஆடி மாதப் பிறப்பால் மக்களிடையே முட்டை நுகா்வு சரிந்துள்ளதாலும், பண்ணைகளில் முட்டைகள் தேக்கம் அதிகரித்து வருவதாலும் விலையில் மாற்றம் செய்யலாம் என தெரிவிக்கப்பட்டது.
அதனடிப்படையில், முட்டையின் பண்ணைக் கொள்முதல் விலை 25 காசுகள் குறைக்கப்பட்டு ரூ.4.20-ஆக நிர்ணயிக்கப்பட்டது. அதேபோல் பல்லடத்தில் நடைபெற்ற தேசிய ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தில் முட்டைக் கோழி விலை கிலோ ரூ. 71-ஆகவும், கறிக்கோழி விலை கிலோ ரூ. 95-ஆகவும் நிர்ணயம் செய்யப்பட்டது.