< Back
மாநில செய்திகள்
நாகர்கோவிலில்  ரெயில்முன் பாய்ந்து முந்திரி தொழிற்சாலை ஊழியர் தற்கொலை
கன்னியாகுமரி
மாநில செய்திகள்

நாகர்கோவிலில் ரெயில்முன் பாய்ந்து முந்திரி தொழிற்சாலை ஊழியர் தற்கொலை

தினத்தந்தி
|
30 July 2022 2:42 AM IST

நாகர்கோவிலில் ரெயில்முன் பாய்ந்து முந்திரி தொழிற்சாலை ஊழியர் தற்கொலை செய்து கொண்டார்.

நாகர்கோவில்:

நாகர்கோவிலில் ரெயில்முன் பாய்ந்து முந்திரி தொழிற்சாலை ஊழியர் தற்கொலை செய்து கொண்டார்.

இந்த சோக சம்பவம் பற்றி போலீஸ் தரப்பில் கூறப்பட்டதாவது:-

தண்டவாளத்தில் பிணம்

நாகர்கோவில் புத்தேரி ரெயில்வே பாலத்தின் கீழ் பகுதியில் உள்ள ரெயில் தண்டவாளத்தில் ஒரு ஆண் பிணமாக கிடப்பதாக நாகர்கோவில் ரெயில்வே போலீசாருக்கு தகவல் வந்தது. அதன்பேரில் சப்-இன்ஸ்பெக்டர் பாபு, தனிப்பிரிவு சப்-இன்ஸ்பெக்டர் குமார்ராஜ் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து பிணத்தை பார்வையிட்டனர்.

இறந்தவரின் சட்டைப்பையில் இருந்த டைரி மூலம் விசாரணை நடத்தினர். அப்போது இறந்தவர் கேரள மாநிலம் கொல்லம் அருகில் உள்ள சிட்டியம் குன்னல்புத்தன்வீடு பகுதியைச் சேர்ந்த ஸ்ரீகுமார் (வயது55) என்பதும், இவர் குமரி மாவட்டத்தில் உள்ள ஒரு தனியார் முந்திரி தொழிற்சாலையில் பணியாற்றி வந்ததும் தெரியவந்தது.

தற்கொலை

நேற்று மாலையில் பெங்களூருவில் இருந்து கன்னியாகுமரி நோக்கிச் சென்ற எக்ஸ்பிரஸ் ரெயில் முன்பு பாய்ந்து தற்கொலை செய்து கொண்டதாக தெரிகிறது. ஆனால், தற்கொலைக்கான காரணம் தெரியவில்லை. இதுகுறித்து ஸ்ரீகுமாரின் உறவினர்களுக்கு தகவல் கொடுக்கப்பட்டது.

மேலும், ரெயில்வே போலீசார் வழக்குப்பதிவு செய்து தற்கொலைக்கான காரணம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர். தற்கொலை செய்த ஸ்ரீகுமார் திருமணமாகி விவாகரத்து பெற்றவர் என்று போலீசாரால் கூறப்படுகிறது.

மேலும் செய்திகள்