நாகப்பட்டினம்
நாகையில், காங்கிரஸ் கட்சியினர் ரெயில் மறியல்
|ராகுல் காந்தியின் எம்.பி. பதவி பறிக்கப்பட்டதை கண்டித்து நாகையில், ரெயில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட காங்கிரஸ் கட்சியை சேர்ந்த பெண்கள் உள்பட 50 பேரை போலீசார் கைது செய்தனர்.
ராகுல் காந்தியின் எம்.பி. பதவி பறிக்கப்பட்டதை கண்டித்து நாகையில், ரெயில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட காங்கிரஸ் கட்சியை சேர்ந்த பெண்கள் உள்பட 50 பேரை போலீசார் கைது செய்தனர்.
ராகுல் காந்தி
பிரதமர் மோடி குறித்து அவதூறாக பேசியதாக காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்திக்கு 2 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்தது. இதை தொடர்ந்து ராகுல் காந்தியின் எம்.பி பதவி பறிக்கப்பட்டது. இதை கண்டித்து நாகை மாவட்டத்தில் 10 இடங்களில் காங்கிரஸ் கட்சி சார்பில் ரெயில் மறியல் போராட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டு இருந்தது.
இதை முன்னிட்டு நாகை மாவட்டத்தில் 100-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர். இந்த நிலையில் திருச்சியில் இருந்து காரைக்காலை நோக்கி சென்ற சரக்கு ரெயிலை நாகை அந்தணப்பேட்டையில் மாவட்ட துணை தலைவர் காதர் தலைமையில் காங்கிரஸ் கட்சியினர் ரெயிலை மறித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.
50 பேர் கைது
அப்போது அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த போலீசார் ரெயில் மறியலில் ஈடுபட்ட 12 பேரை கைது செய்தனர். அதேபோல நம்பியா நகர் ெரயில்வே கேட் வெளிப்பாளையம் ெரயில் நிலையம் ஆகிய இடங்களில் மாவட்ட பொதுச் செயலாளர் தெய்வயானை தலைமையில் காங்கிரஸ் கட்சியினர் ரெயில் மறியலில் ஈடுபட முயன்றனர்.
ரெயில் மறியலில் ஈடுபட முயன்ற காங்கிரஸ் கட்சியினரை கைது செய்தனர். நாகை பகுதிகளில் ெரயில் மறியல் போராட்டத்தில் 6 பெண்கள் உள்பட 50 பேரை போலீசார் கைது செய்து அவர்களை திருமண மண்டபத்தில் தங்க வைத்தனர்.
---