< Back
மாநில செய்திகள்
நாகப்பட்டினம்
மாநில செய்திகள்
நாகையில், இன்று மின்நிறுத்தம்
|15 July 2023 12:15 AM IST
நாகையில், இன்று மின்நிறுத்தம்
நாகை கோட்டத்திற்கு உட்பட்ட பகுதிகளில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் இன்று (சனிக்கிழமை) நடக்கிறது. இதனால் திட்டச்சேரி துணைமின் நிலையத்திலிருந்து மின்சாரம் பெறும் ப.கொந்தகை, பனங்குடி, மரைக்கான்சாவடி, குத்தாலம், வாழ்மங்களம், திட்டச்சேரி ஆகிய பகுதிகளுக்கும், வேளாங்கண்ணி துணைமின் நிலையத்திலிருந்து மின்சாரம் பெறும் வேளாங்கண்ணி, கிராமத்து மேடு, தெற்குபொய்கை நல்லுார், பிரதாபராமபுரம் ஆகிய பகுதிகளுக்கும், வேட்டைக்காரனிருப்பு துணைமின் நிலையத்திலிருந்து மின்சாரம் பெறும் வேட்டைக்காரனிருப்பு, கோவில்பத்து, வெள்ளப்பள்ளம், நாலுவேதபதி, தாமரைப்புலம், விழுந்தமாவடி, திருப்பூண்டி மற்றும் புதுப்பள்ளி ஆகிய பகுதிகளுக்கும் இன்று (சனிக்கிழமை) காலை 9 மணி முதல் மாலை 5 மணி மின் வினியோகம் இருக்காது என்று நாகை உதவி செயற்பொறியாளர் நடேசன் தெரிவித்துள்ளார்.