< Back
மாநில செய்திகள்
நாகையில், விற்பனைக்காக குவியும் மாம்பழங்கள்
நாகப்பட்டினம்
மாநில செய்திகள்

நாகையில், விற்பனைக்காக குவியும் மாம்பழங்கள்

தினத்தந்தி
|
26 April 2023 12:15 AM IST

சீசன் தொடங்கியதால் நாகையில் விற்பனைக்காக மாம்பழங்கள் வரத்தொடங்கியது. பொதுமக்கள் ஆர்வமுடன் வாங்கி செல்கின்றனர்.


சீசன் தொடங்கியதால் நாகையில் விற்பனைக்காக மாம்பழங்கள் வரத்தொடங்கியது. பொதுமக்கள் ஆர்வமுடன் வாங்கி செல்கின்றனர்.

முக்கனியில் முதன்மையானது

முக்கனிகளில் முதன்மையானது மாம்பழம். சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் ரசித்து உண்ணக்கூடிய பழமாகவும் மாம்பழம் உள்ளது. மார்ச் மாதம் மாம்பழ சீசன் தொடங்கும். நாகை மற்றும் பல்வேறு பகுதிகளில் மாம்பழம் பயிரிடப்பட்டுள்ளது.

குறிப்பாக தெற்கு பொய்கைநல்லூர், வடக்கு பொய்கைநல்லூர், வேளாங்கண்ணி, காமேஸ்வரம், விழுந்தமாவடி உள்ளிட்ட கடலோர கிராமங்களில் அதிக அளவில் மாம்பழங்கள் சாகுபடி செய்யப்பட்டு வருகிறது.

சீசன் தொடங்கியது

இந்த நாட்டு மாம்பழங்கள் பெரும்பாலும் பரவை சந்தைக்கு வந்து, அங்கிருந்து பல்வேறு பகுதிகளுக்கு விற்பனைக்காக கொண்டு செல்லப்படுகிறது. சீசன் தொடங்கி உள்ளதால் நாகை கடைவீதியில் விற்பனைக்காக மாம்பழங்கள் வர தொடங்கியுள்ளது. சாலையோர கடைகள், தள்ளுவண்டி கடைகளில் பல வகையான மாம்பழங்கள் குவித்து வைக்கப்பட்டுள்ளன. பொதுமக்கள் ஆர்வமுடன் வாங்கி செல்கின்றனர்.

இதுகுறித்து வியாபாரிகள் கூறுகையில், விழுந்தமாவடி, காமேஸ்வரம் உள்ளிட்ட பகுதிகளில் விவசாயிகளிடம் இருந்து நேரடியாக மாம்பழத்தை வாங்குகிறோம். மாம்பழத்தின் ரகத்திற்கு ஏற்ப விலை நிர்ணயம் செய்யப்படும்.

விலை அதிகம்

அந்த வகையில் காமேஸ்வரம் பகுதியில் இருந்து விற்பனைக்காக வந்த ஒரு கிலோ பங்கனபள்ளி ரூ.100-க்கும், செந்தூரா ரூ.80-க்கும், இமாமஸ் ரூ.120-க்கும், ருமேனிய ரூ.80-க்கும், ஒட்டு மாம்பழம் ரூ.60-க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

கடந்த ஆண்டை விட விலை சற்று அதிகம் தான். ஆனால் தொடர்ந்து வரத்து அதிகரித்தால் விலை குறைய தொடங்கிவிடும் என்றனர்.

மேலும் செய்திகள்