< Back
மாநில செய்திகள்
நாகையில், தி.மு.க.வினர் உண்ணாவிரத போராட்டம்
நாகப்பட்டினம்
மாநில செய்திகள்

நாகையில், தி.மு.க.வினர் உண்ணாவிரத போராட்டம்

தினத்தந்தி
|
21 Aug 2023 12:15 AM IST

நீட் தேர்வை ரத்து செய்யக்கோரி நாகையில் தி.மு.க.வினர் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டனர்.


நீட் தேர்வை ரத்து செய்யக்கோரி நாகையில் தி.மு.க.வினர் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டனர்.

நீட் தேர்வு

நீட் தேர்வை திணிக்கும் பா.ஜ.க. அரசு, தமிழ்நாடு ஆளுனர் ஆகியோரை கண்டித்து நாகை மாவட்ட தி.மு.க. இளைஞரணி, மாணவரணி, மருத்துவர் அணி சார்பில் அவுரித்திடலில் உண்ணாவிரத போராட்டம் நடைபெற்றது. போராட்டத்திற்கு தமிழ்நாடு மீன்வளர்ச்சி கழக தலைவரும், நாகை மாவட்ட செயலாளருமான கவுதமன் தலைமை தாங்கினார். மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் கார்த்திக், மாவட்ட மருத்துவர் அணி அமைப்பாளர் முகுந்தன் ஆகியோர் வரவேற்றனர்.

தமிழ்நாடு தாட்கோ தலைவர் மதிவாணன், விவசாய அணி மாநில துணை செயலாளர் வேதரத்தினம், தீர்மானக்குழு உறுப்பினர் காமராஜ், மாவட்ட அவைத்தலைவர் செல்வம் ஆகியோர் முன்னிலை வகித்தனர். போராட்டத்தில் செய்தி தொடர்பு மாநில செயலாளர் கான்ஸ்டன்டைன்ரவீந்திரன் பேசினார்.

கோஷங்கள் எழுப்பினர்

தமிழ்நாடு மாணவர்களின் உயிரை பறிக்கும் நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும். நீட் தேர்வை திணிக்க முயற்சி செய்யும் பா.ஜ.க. அரசை கண்டிப்பது, நீட் தேர்வு ரத்து செய்யும் தீர்மானத்தை திருப்பி அனுப்பிய தமிழ்நாடு ஆளுனரை கண்டிப்பது என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை குறித்து கோஷங்களை எழுப்பினர்.

இதில் மாவட்ட துணை செயலாளர் மணிவண்ணன், நகர செயலாளர்கள் மாரிமுத்து, செந்தில்குமார், புகழேந்தி, ஒன்றிய செயலாளர்கள் ராஜேந்திரன், ஆனந்த், தாமஸ்ஆல்வாஎடிசன், செல்வசெங்குட்டுவன், மாவட்ட பொருளாளர் லோகநாதன், சார்பு அணி நிர்வாகிகள் மற்றும் பலர் கலந்து கொண்டனர். முடிவில் மாணவர் அணி மாவட்ட அமைப்பாளர் உதயகுமார் நன்றி கூறினார்.

மேலும் செய்திகள்