< Back
மாநில செய்திகள்
நாகையில், பா.ஜனதா விவசாய அணியினர் ஆர்ப்பாட்டம்
நாகப்பட்டினம்
மாநில செய்திகள்

நாகையில், பா.ஜனதா விவசாய அணியினர் ஆர்ப்பாட்டம்

தினத்தந்தி
|
27 Dec 2022 12:15 AM IST

பொங்கல் பண்டிகைக்கு கரும்பு வழங்கக்கோரி நாகையில், பா.ஜனதா விவசாய அணியினர் ஆர்ப்பாட்டம் நடந்தது

பொங்கல் பண்டிகைக்கு ரேஷன் கார்டு தாரர்களுக்கு கரும்பு, வெல்லம், தேங்காய் உள்ளிட்டவற்றை வழங்க வேண்டும் என்பதை வலியுறுத்தி நாகை மாவட்ட பா.ஜனதா விவசாய அணி சார்பில் கலெக்டர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடந்தது. ஆர்ப்பாட்டத்துக்கு மாவட்ட விவசாய அணித்தலைவர் கிருஷ்ணமூர்த்தி தலைமை தாங்கினார். மாவட்ட பொதுச்செயலாளர்கள் பானுச்சந்திரன், வைரமுத்து ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாநில செயற்குழு உறுப்பினர் நேதாஜி, மாவட்ட தலைவர் கார்த்திகேயன் ஆகியோர் கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினர். இதில், மாவட்ட துணைத்தலைவர் சந்தோஷ், மாவட்ட செயலாளர்கள் சத்தியா, ஜோதிபாசு, தேவூர் பாபு, மகளிர் அணி தலைவர் அண்ணராணி, பொதுச்செயலாளர் விஜிலா, ஆன்மிக பிரிவு மாவட்டத்தலைவர் கஜேந்திரன் உள்பட பலர் கலந்துகொண்டனர். முடிவில் நகரத்தலைவர் சுந்தர் நன்றி கூறினார்.

மேலும் செய்திகள்