< Back
மாநில செய்திகள்
நாகப்பட்டினம்
மாநில செய்திகள்
நாகையில், மக்கள் குறைதீர்க்கும் கூட்டம்
|30 Jun 2023 12:15 AM IST
நாகையில், மக்கள் குறைதீர்க்கும் கூட்டம் போலீஸ் சூப்பிரண்டு ஹர்ஷ் சிங் தலைமையில் நடந்தது
நாகை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் வாராந்திர மக்கள் குறை தீர்க்கும் கூட்டம் நடைபெற்றது. கூட்டத்துக்கு போலீஸ் சூப்பிரண்டு ஹர்ஷ் சிங் தலைமை தாங்கி பொதுமக்களிடம் இருந்து 22 கோரிக்கை மனுக்களை பெற்றார். தொடர்ந்து பெறப்பட்ட மனுக்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க சம்பந்தப்பட்ட போலீஸ் நிலையங்களுக்கு உத்தரவிட்டார். மேலும் சாராயம், கஞ்சா கடத்தல் உள்ளிட்ட பிரச்சினைகளை நேரடியாக தெரிவிக்க உங்கள் எஸ்.பி.யிடம் பேசுங்கள் 84281 03040 என்ற தொலைபேசி எண் மூலம் தகவல் தெரிவிக்கவும், அவ்வாறு தகவல் தெரிவிப்பவர்களின் ரகசியம் காக்கப்படும் என்றும் போலீஸ் சூப்பிரண்டு தெரிவித்தார். கூட்டத்தில் கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு சுகுமாரன் உள்பட போலீஸ் அதிகாரிகள் பலர் கலந்து கொண்டனர்.