< Back
மாநில செய்திகள்
முத்துப்பேட்டையில், போலீசார் அணிவகுப்பு ஒத்திகை
திருவாரூர்
மாநில செய்திகள்

முத்துப்பேட்டையில், போலீசார் அணிவகுப்பு ஒத்திகை

தினத்தந்தி
|
15 Sept 2023 12:15 AM IST

விநாயகர் சிலை ஊர்வலத்தையொட்டி முத்துப்பேட்டையில், போலீசார் அணிவகுப்பு ஒத்திகையில் ஈடுபட்டனர்.

முத்துப்பேட்டை:

விநாயகர் சதுர்த்தி விழா வருகிற 18-ந்தேதி கொண்டாடப்படுகிறது. இதை தொடர்ந்து முத்துப்பேட்டையில் வருகிற 24-ந்தேதி இந்து முன்னணி சார்பில் விநாயகர் சிலை ஊர்வலம் நடைபெற உள்ளது. இதை முன்னிட்டு நேற்று மாலை முத்துப்பேட்டையில் போலீசார் அணிவகுப்பு ஒத்திகை நடைபெற்றது.முன்னதாக புதிய பஸ் நிலையத்தில் இருந்து திருவாரூர் போலீஸ் சூப்பிரண்டு சுரேஷ்குமார் தலைமையில், கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு வெள்ளத்துரை முன்னிலையில் 100-க்கும் மேற்பட்ட போலீசாரின் அணிவகுப்பு ஒத்திகை தொடங்கியது. அணிவகுப்பு ஒத்திகை ஊர்வலம் முக்கிய வீதிகளின் வழியாக சென்றது. இதில் முத்துப்பேட்டை துணை போலீஸ் சூப்பிரண்டு சோமசுந்தரம், ஆயுதப்படை துணை போலீஸ் சூப்பிரண்டு சந்திரமோகன், இன்ஸ்பெக்டர்கள் ராஜேஷ் (முத்துப்பேட்டை), (முனியாண்டி)பெருகவாழ்ந்தான் , அனந்த பத்மநாதன்(எடையூர)், விஜயா(களப்பாள்), செந்தில்குமரன் (திருக்களார்), சப்.இன்ஸ்பெக்டர் பாலசுப்பிரமணியன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

மேலும் செய்திகள்