< Back
மாநில செய்திகள்
முத்தையாபுரத்தில் 2 மோட்டார் சைக்கிள்கள் மோதல்; தொழிலாளி சாவு
தூத்துக்குடி
மாநில செய்திகள்

முத்தையாபுரத்தில் 2 மோட்டார் சைக்கிள்கள் மோதல்; தொழிலாளி சாவு

தினத்தந்தி
|
21 July 2023 12:15 AM IST

முத்தையாபுரத்தில் 2 மோட்டார் சைக்கிள்கள் மோதிக்கொண்ட விபத்தில் தொழிலாளி இறந்து போனார்.

ஸ்பிக்நகர்:

முத்தையாபுரத்தில் 2 மோட்டார் சைக்கிள்கள் நேருக்கு நேர் மோதிக்கொண்ட விபத்தில் உணவு வினியோகம் செய்யும் தனியார் நிறுவன தொழிலாளி பரிதாபமாக பலியானார். மற்றொரு மோட்டார் சைக்கிளில் வந்த வாலிபர் படுகாயங்களுடன் சிகிச்சை பெற்று வருகிறார்.

தனியார் நிறுவன தொழிலாளி

தூத்துக்குடி சிவந்தாகுளம் ரோடு, மாடசாமி கோவில் தெருவை சேர்ந்தவர் சுப்புராஜ் (வயது 52). இவர் உணவு வினியோகம் செய்யும் தனியார் நிறுவனத்தில் தொழிலாளியாக வேலை பார்த்து வந்தார். இவர் நேற்று முன்தினம் முத்தையாபுரத்தில் இருந்து துறைமுகம் செல்லும் சாலையில் மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார். அப்போது எதிரே அருப்புக்கோட்டை சேர்ந்த ராமர் மகன் வயிரவன் (28) என்பவர் மோட்டார் சைக்கிளில் வந்துள்ளார்.

நேருக்கு நேர் மோதல்

அந்த சாலையிலுள்ள தனியார் தொழிற்சாலை அருகே சென்றபோது, சுப்புராஜ் ஓட்டி வந்த மோட்டார் சைக்கிள் மீது வயிரவனின் மோட்டார் சைக்கிள் நேருக்குநேர் பலமாக மோதியதாக கூறப்படுகிறது இதில் சுப்புராஜூவும், வயிரவனும் மோட்டார் சைக்கிள்களில் இருந்து தூக்கி வீசப்பட்டு படுகாயங்களுடன் சாலையில் கிடந்தனர்.

அக்கம் பக்கத்தினர் இருவரையும் மீட்டு, சிகிச்சைக்காக தூத்துக்குடி அரசு ஆஸ்பத்திரியில் ேசர்த்தனர்.

சாவு

அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று அதிகாலையில் சுப்புராஜ் பரிதாபமாக உயிர் இழந்தார். படுகாயங்களுடன் வயிரவன் ஆஸ்பத்திரியில் சிகி்ச்சை பெற்று வருகிறார். இந்த விபத்து குறித்து முத்தையாபுரம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் செய்திகள்