< Back
மாநில செய்திகள்
முதுகுளத்தூரில் விவசாய நிலத்தில் குளமாக தேங்கிய கழிவுநீர்
ராமநாதபுரம்
மாநில செய்திகள்

முதுகுளத்தூரில் விவசாய நிலத்தில் குளமாக தேங்கிய கழிவுநீர்

தினத்தந்தி
|
16 Oct 2023 12:19 AM IST

முதுகுளத்தூரில் விவசாய நிலத்தில் கழிவுநீர் குளம் போல் தேங்கி உள்ளது. வடிகால் வசதி அமைத்து தர வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.

முதுகுளத்தூர்,

குளம் போல தேங்கிய கழிவுநீர்

முதுகுளத்தூர் பேரூராட்சி பகுதியில் 15 வார்டுகள் உள்ளன. இங்கு 15 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர். 12-வது வார்டு கடலாடி செல்லும் சாலையில் விவசாய நிலத்தில் கழிவுநீர் குளம் போல தேங்கியுள்ளது. முதுகுளத்தூர் பேரூராட்சி பகுதியில் கழிவு நீர் வெளியேற்றுவதற்கு போதிய வடிகால் வசதி இல்லாததால் குளம் போல் தேங்கி தொற்று நோய் பரவும் சூழ்நிலை ஏற்படுகிறது.

இதுகுறித்து பலமுறை பேரூராட்சி அதிகாரிகளிடம் மனு அளித்தும் எந்த விதமான நடவடிக்கை எடுக்காமல் அலட்சியம் காட்டுவதாக அப்பகுதி மக்கள் குற்றம் சாட்டுகின்றனர்.

வடிகால் வசதி

தற்பொழுது டெங்கு காய்ச்சல் பரவி வரும் சூழ்நிலையில் அப்பகுதியில் தேங்கியுள்ள கழிவுநீரை வெளியேற்றுவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும், இனிவரும் காலங்களில் கழிவுநீர் தேங்காமல் இருக்க முறையாக வடிகால் வசதி அமைத்து தரவும் வலியுறுத்தியுள்ளனர்.

மேலும் விவசாய நிலங்களில் கழிவுநீர் அனைத்தும் குளம் தேங்கி நிற்பதால் அதிகபடியாக துர்நாற்றம் வீசுவதாகவும், விவசாய பணிகள் செய்ய முடியாமலும் அந்த வழியாக நடந்து செல்லும் பொதுமக்கள், வாகன ஓட்டிகள் நோய்பரவும் அச்சத்துடன் கடந்து செல்கின்றனர். எனவே விவசாய நிலங்களில் குளம்போல் கழிவு நீர் தேங்கியுள்ளதை அப்புறப்படுத்த வேண்டும் என அப்பகுதியில் உள்ள பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

Related Tags :
மேலும் செய்திகள்