< Back
மாநில செய்திகள்
தேனி
மாநில செய்திகள்
மேகமலை வனப்பகுதியில்தனியார் எஸ்டேட் அருகே இறந்து கிடந்த யானை
|17 March 2023 12:15 AM IST
மேகமலை வனப்பகுதியில் தனியார் எஸ்டேட் அருகே யானை இறந்து கிடந்தது.
கடமலை-மயிலை ஒன்றியம் மேகமலை வனச்சரகத்திற்கு உட்பட்ட வனப்பகுதியில் யானைகள் அதிக அளவில் உள்ளன. இந்த நிலையில் நேற்று இந்திராநகர் மலைக்கிராமத்தில் இருந்து பொதுமக்கள் சிலர் அருகே உள்ள தனியார் எஸ்டேட்டுக்கு கூலி வேலைக்கு சென்றனர். அப்போது எஸ்டேட் அருகே உள்ள வனப்பகுதியில் யானை ஒன்று இறந்து கிடந்தது. இதையடுத்து பொதுமக்கள் மேகமலை வனத்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் வனத்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று பார்வையிட்டனர். பரிசோதனை முடிவு வந்த பின்பே யானை இறந்ததற்கான காரணம் தெரியவரும் என வனத்துறையினர் தெரிவித்தனர்.