< Back
மாநில செய்திகள்
மயிலாடும்பாறையில்  ஊட்டச்சத்து விழிப்புணர்வு ஊர்வலம்
தேனி
மாநில செய்திகள்

மயிலாடும்பாறையில் ஊட்டச்சத்து விழிப்புணர்வு ஊர்வலம்

தினத்தந்தி
|
12 Sept 2022 8:09 PM IST

மயிலாடும்பாறையில் ஊட்டச்சத்து குறித்து விழிப்புணர்வு ஊர்வலம் நடந்தது

மாவட்ட சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறையின் கீழ் இயங்கும் ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சி திட்டப்பணிகள் சார்பில் மயிலாடும்பாறை ஒன்றிய அலுவலகத்தில் தேசிய ஊட்டச்சத்து மாத திருவிழா தொடக்க நிகழ்ச்சி நடைபெற்றது. இதற்கு கடமலை-மயிலை ஒன்றியக்குழு தலைவர் சித்ரா சுரேஷ் தலைமை தாங்கினார். நிகழ்ச்சியில் கடமலை-மயிலை ஒன்றியத்தை சேர்ந்த அங்கன்வாடி பணியாளர்கள் கலந்து கொண்டு ஊட்டச்சத்து விழிப்புணர்வு உறுதி மொழி ஏற்று கொண்டனர். பின்னர் ஒன்றிய அலுவலகத்தில் இருந்து பஸ் நிறுத்தம் வரை அங்கன்வாடி பணியாளர்கள் ஊட்டச்சத்து தொடர்பான விழிப்புணர்வு ஊர்வலம் நடத்தினர். ஊர்வலத்தில் கடமலை-மயிலை வடக்கு தி.மு.க. ஒன்றிய செயலாளர் தங்கப்பாண்டி உள்பட பலர் கலந்து கொண்டனர்.

மேலும் செய்திகள்