< Back
மாநில செய்திகள்
தர்மபுரி
மாநில செய்திகள்
காதல் விவகாரத்தில் தொழிலாளியை தாக்கிய வாலிபர் கைது
|8 Sept 2023 12:30 AM IST
காதல் விவகாரத்தில் தொழிலாளியை தாக்கிய வாலிபர் கைது செய்யப்பட்டார்
மொரப்பூர்:
மொரப்பூர் அண்ணல் நகரை சேர்ந்த முருகன் மகள் சுபவர்ஷினி (வயது 20). இவரும் அதே பகுதியை சேர்ந்த வேலு மகன் ஆகாஷ் (25) என்பவரும் காதலித்து வந்ததாக கூறப்படுகிறது. இவர்களது காதல் விவகாரம் பெண் வீட்டிற்கு தெரியவந்தது. இதனால் சுபவர்ஷினி காதலனுடன் பேசுவதை நிறுத்தி விட்டதாக கூறப்படுகிறது. .
இதனை தொடர்ந்து ஆகாஷ் தன்னுடன் பேசுமாறு சுபவர்ஷினியை மிரட்டியதாக தெரிகிறது. இந்த நிலையில் ஆகாஷ் சம்பவத்தன்று மது குடித்துவிட்டு சுபவர்ஷினி, அவருடைய தந்தை முருகன் மற்றும் சித்தப்பா தமிழரசு (46) ஆகியோரை தகாத வார்த்தைகளால் திட்டி கொலை மிரட்டல் விடுத்தாராம். மேலும் தொழிலாளியான தமிழரசுவை, ஆகாஷ் தாக்கியதாக சொல்லப்படுகிறது. இதுகுறித்த புகாரின்பேரில் மொரப்பூர் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சேகர் வழக்குப்பதிவு செய்து ஆகாைச கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார்.