< Back
மாநில செய்திகள்
திருமணம் ஆகாத ஏக்கத்தில்வாலிபர் தூக்குப்போட்டு தற்கொலை
ஈரோடு
மாநில செய்திகள்

திருமணம் ஆகாத ஏக்கத்தில்வாலிபர் தூக்குப்போட்டு தற்கொலை

தினத்தந்தி
|
29 Aug 2023 2:00 AM IST

திருமணம் ஆகாத ஏக்கத்தில் வாலிபர் தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்டாா்

திருமணம் ஆகாத ஏக்கத்தில் வாலிபர் தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்டார்.

திருமணம் செய்து வைக்க...

ஈரோடு கருங்கல்பாளையம் கமலா நகர் பகுதியை சேர்ந்தவர் செல்வம். இவருடைய மனைவி வள்ளி. இவர்களுடைய மகன்கள் பிரபாகரன் (வயது 31), ஆனந்த் (29). இதில் ஆனந்த் டிப்ளமோ படித்துவிட்டு பிளாஸ்டிக் கதவுகள் அமைத்து தரும் வேலை செய்து வந்தார். தனக்கு திருமணம் செய்து வைக்கும்படி ஆனந்த் தனது தாயிடம் கேட்டுள்ளார். அதற்கு அவர், மூத்த மகனுக்கு திருமணம் செய்து வைத்துவிட்டு பின்னர் உனக்கு திருமணம் செய்து வைக்கிறேன் என்று கூறியதாக தெரிகிறது.

விசாரணை

இதனால் திருமணம் ஆகாத ஏக்கத்தில் இருந்த ஆனந்த் மனம் உடைந்து நேற்று முன்தினம் வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் தூக்குப்போட்டு கொண்டார். இதைப்பார்த்த அக்கம்பக்கத்தினர் அவரை மீட்டு சிகிச்சைக்காக ஈரோடு அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு பரிசோதனை செய்த டாக்டர்கள் ஏற்கனவே ஆனந்த் இறந்துவிட்டதாக தெரிவித்தனர். இதுகுறித்து ஈரோடு கருங்கல்பாளையம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

மேலும் செய்திகள்