< Back
மாநில செய்திகள்
தேனி
மாநில செய்திகள்
குமுளியில்ரூ.42 ஆயிரம் லாட்டரி சீட்டுகள் பறிமுதல் :4 பேர் சிக்கினர்
|25 April 2023 12:15 AM IST
குமுளியில் ரூ.42 ஆயிரம் லாட்டரி சீட்டுகள் வைத்திருந்த 4 பேரை போலீசார் கைது செய்தனர்.
லோயர்கேம்ப் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் மூவேந்தன் தலைமையில் போலீசார் தமிழக எல்லை குமுளி பஸ் நிறுத்தம் பகுதியில் வாகன தணிக்கையில் ஈடுபட்டனர். அப்போது அங்கு கையில் பையுடன் 4 பேர் நின்று கொண்டிருந்தனர். அவர்களை சந்தேகத்தின்பேரில் பிடித்து பையை சோதனை செய்தனர். அதில் தடை செய்யப்பட்ட ரூ.42 ஆயிரத்து 360 மதிப்புள்ள 1,044 லாட்டரி சீட்டுகள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
அதனை பறிமுதல் செய்த போலீசார் விசாரணை நடத்தினர். விசாரணையில் அவர்கள் மதுரை பேரையூரைச் சேர்ந்த ராமமூர்த்தி (வயது 66), கண்டமனூரைச் சேர்ந்த சுப்புராஜ் (53), குச்சனூரைச் சேர்ந்த பாமசிவம் (55), கம்பம் நகரைச் சேர்ந்த அரசன் (60) என்பது தெரியவந்தது. இதையடுத்து அவர்களை போலீசார் கைது செய்தனர்.