< Back
மாநில செய்திகள்
குமரியில் ஒரே நாளில் 20 பேருக்கு கொரோனா
கன்னியாகுமரி
மாநில செய்திகள்

குமரியில் ஒரே நாளில் 20 பேருக்கு கொரோனா

தினத்தந்தி
|
31 March 2023 3:05 AM IST

குமரியில் ஒரே நாளில் 20 பேருக்கு கொரோனா பாதிக்கப்பட்டு உள்ளது.

நாகர்கோவில்:

குமரி மாவட்டத்திலும் கொரோனா பரவல் நாளுக்கு நாள் அதிகரிக்க தொடங்கியுள்ளது. தொற்று பரவலை கட்டுப்படுத்த சுகாதாரத்துறை அதிகாரிகள் காய்ச்சல் மற்றும் சளி பரிசோதனை முகாமை மேற்கொண்டு வருகிறார்கள்.

அதன்படி மாவட்டம் முழுவதும் நேற்று 352 பேருக்கு கொரோனா பரிசோதனை நடத்தப்பட்டது. இதில் 11 ஆண்கள் மற்றும் 9 பெண்கள் என மொத்தம் 20 பேருக்கு கொரோனா பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. தொற்று பாதித்த அனைவரும் வீட்டு தனிமையில் சிகிச்சை பெற்று வருகிறார்கள்.

மேலும் செய்திகள்