< Back
மாநில செய்திகள்
தூத்துக்குடி
மாநில செய்திகள்
குலையன்கரிசலில்முகமூடி கொள்ளையர்கள் அட்டகாசம்
|28 Aug 2023 12:15 AM IST
குலையன்கரிசலில் முகமூடி கொள்ளையர்கள் அட்டகாசம் அதிகரித்து வருகிறது.
சாயர்புரம்:
குலையன்கரிசல் கிராமத்தில் நள்ளிரவு நேரங்களில் தெருக்களில் முகமூடி அணிந்த கொள்ளையர்கள் கடந்த சில நாட்களாக பூட்டியிருக்கும் வீடுகளில் பூட்டை உடைத்து திருட முயற்சித்து உள்ளனர். நேற்று அதிகாலையில் நடமாடிய கொள்ளையர்களை கிராம வாலிபர்கள் பிடிக்க முயன்றபோது, கத்தியை காட்டி மிரட்டிவிட்டு தப்பி ஓடிவிட்டனராம். எனவே, இக்கிராமத்தில் முகமூடிகொள்ளையர் நடமாட்டத்தை தடுக்க போலீசார் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.