< Back
மாநில செய்திகள்
குலசேகரன்பட்டினத்தில் மாங்கனி திருவிழா
தூத்துக்குடி
மாநில செய்திகள்

குலசேகரன்பட்டினத்தில் மாங்கனி திருவிழா

தினத்தந்தி
|
5 July 2023 12:15 AM IST

குலசேகரன்பட்டினத்தில் மாங்கனி திருவிழா நடந்தது.

குலசேகரன்பட்டினம்:

அறுபத்து மூன்று நாயன்மார்களில் அமர்ந்த நிலையில் அருள்பாலிப்பவரும், இறைவனால் அம்மையே என்று அழைக்கப்பட்டவர் காரைக்கால் அம்மையார். இவர் குலசகேரன்பட்டினம் அருகேயுள்ள மண்டபத்தில் பேயுருவம் பெற்றார். அந்த மண்டபத்தில் மாங்கனித் திருவிழா நடைபெற்றது. இதை முன்னிட்டு நெல்லை திருவுருமாமலை பன்னிரு திருமுறை வழிபாட்டுக் குழு தலைவர் வள்ளிநாயகம் தலைமையில் காலை முதல் மாலை வரை அறம் வளர்த்த நாயகி அம்மன் கோவிலில் வழிபாடு நடைபெற்றது. காரைக்கால் அம்மையாரின் பதிகங்கள், பெரியபுராண பாடல்கள் திருமுறை விண்ணப்பம் செய்யப்பட்டது. மழை வளம் வேண்டி திருஞானசம்பந்தரின் மழைப்பதிகம் பாடப்பட்டது. மாலையில் காரைக்கால் அம்மையார் மண்டபத்தில் மாங்கனிகள் படைத்து சிறப்பு வழிபாடு நடைபெற்றது. இதில் குலசேகரன்பட்டினம் முத்தாரம்மன் கோவில் செயல் அலுவலர் ராமசுப்பிரமணியன் உட்பட திரளான பக்தர்கள் கலந்துகொண்டனர்.

மேலும் செய்திகள்