< Back
மாநில செய்திகள்
கூடலூர் நகராட்சியில்தெருவிளக்குகள் பொருத்தும் பணி
தேனி
மாநில செய்திகள்

கூடலூர் நகராட்சியில்தெருவிளக்குகள் பொருத்தும் பணி

தினத்தந்தி
|
24 Aug 2023 6:45 PM GMT

கூடலூர் நகராட்சியில் தெருவிளக்குகள் பொருத்தும் பணி நடைபெற்று வருகிறது.

கூடலூர் நகராட்சியில் மொத்தம் 21 வார்டுகள் உள்ளன. அனைத்து வார்டுகளுக்கும் நகராட்சி மூலம் குடிநீர், கழிவுநீர் கால்வாய் மற்றும் தெருவிளக்குகள் உள்பட அனைத்து அடிப்படை வசதிகளும் செய்யப்பட்டு வருகிறது. இந்நிலையில் கூடலூர் நகர பகுதிகளில் உள்ள அனைத்து தெருக்களிலும் எல்.இ.டி. பல்புகள் பொருத்தப்படும் என்று நகராட்சி கூட்டத்தில் முடிவு எடுக்கப்பட்டது. அதன்படி, ரூ.1 கோடியே 47 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு தெருவிளக்குகள் பொருத்தும் பணி நேற்று தொடங்கியது. முதற்கட்டமாக கூடலூர் கூடலழகிய பெருமாள் கோவில் முன்பு தெரு விளக்கு பொருத்தும் பணியை நகராட்சி தலைவர் பத்மாவதி லோகந்துரை தொடங்கி வைத்தார். சிறிய வீதியில் 20 வாட், தெருக்களில் 40 வாட், மெயின் வீதிகளில் 80 வாட் பல்புகள் பொருத்தப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.

Related Tags :
மேலும் செய்திகள்