தூத்துக்குடி
கோவில்பட்டி பள்ளியில் உயர்கல்வி வழிகாட்டல் நிகழ்ச்சி
|கோவில்பட்டி பள்ளியில் உயர்கல்வி வழிகாட்டல் நிகழ்ச்சி நடந்தது.
கோவில்பட்டி:
கோவில்பட்டி லட்சுமி மில் மேல்நிலைப் பள்ளி அரங்கில் நான் முதல்வன் திட்ட உயர் கல்வி வழிகாட்டல் நிகழ்ச்சி நடந்தது. நிகழ்ச்சிக்கு கூடுதல் கலெக்டர் தாக்கரே சுபம் ஞானதேவ் ராவ் தலைமை வகித்து பேசினார். நிகழ்ச்சிக்கு உதவி கலெக்டர் ஜெயா, மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் ரெஜினி, மாவட்ட கல்வி அலுவலர்கள் ஜெயபிரகாஷ் ராஜன், சின்னராஜ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். பள்ளி தலைமை ஆசிரியர் சண்முகராஜ் வரவேற்று பேசினார். அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி இணை பேராசிரியர் ஜி.சந்தன மாரியம்மாள், மாவட்ட பிற்படுத்தப்படோர் நல அலுவலர் டி.விக்னேஸ்வரன், மாவட்ட திறன் பயிற்சி அலுவலக உதவி இயக்குனர் ஜெ.ஏஞ்சல் விஜய நிர்மலா, ஸ்டேட் வங்கி பஜார் கிளை மேலாளர் அறிவழகன் ஆகியோர் பேசினர். நிகழ்ச்சியில் கோவில்பட்டி பஞ்சாயத்து யூனியன் ஆணையாளர் ராஜேஷ் குமார், ஒருங்கிணைப் பாளர்கள் சுடலைமணி, ஜான்சன் மற்றும் அலுவலர்கள் கலந்து கொண்டனர். மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில் வழிகாட்டு மைய உதவி இயக்குநர் ம.பேச்சியம்மாள் நன்றி கூறினார்.
நிகழ்ச்சியை யொட்டி பாரத ஸ்டேட் வங்கி, அரசு மற்றும் தனியார் பாலிடெக்னிக் கல்லூரிகள், பொறியியல் கல்லூரி, கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளின் அரங்குகள் அமைக்கப் பட்டிருந்தன. இதில், கடந்த கல்வி ஆண்டில் பிளஸ்-2வகுப்பு முடித்த மாணவ- மாணவிகள், அந்தந்த பள்ளிகளின் தலைமை ஆசிரியர்கள் கலந்து கொண்டனர்.