< Back
மாநில செய்திகள்
கோவில்பட்டி பள்ளியில் போதைப்பொருள் ஒழிப்பு  விழிப்புணர்வு சிலம்பாட்ட போட்டி
தூத்துக்குடி
மாநில செய்திகள்

கோவில்பட்டி பள்ளியில் போதைப்பொருள் ஒழிப்பு விழிப்புணர்வு சிலம்பாட்ட போட்டி

தினத்தந்தி
|
27 Jun 2023 12:15 AM IST

கோவில்பட்டி பள்ளியில் போதைப்பொருள் ஒழிப்பு விழிப்புணர்வு சிலம்பாட்ட போட்டி நடைபெற்றது.

கோவில்பட்டி:

கோவில்பட்டி கோட்ட கலால்துறை சார்பில் சர்வதேச போதைப் பொருள் ஒழிப்பு மற்றும் கடத்தலுக்கு எதிரான விழிப்புணர்வு சிலம்பாட்ட போட்டி நேற்று வ. உ. சி. அரசு மேல்நிலைப்பள்ளி மைதானத்தில் நடத்தப்பட்டது.

நிகழ்ச்சிக்கு கோட்ட கலால்அலுவலர் பா. செல்ல பாண்டியன் தலைமை தாங்கி, சிலம்பாட்ட போட்டியை தொடங்கி வைத்தார். போட்டியில் 150-க்கும் மேற்பட்ட மாணவர்கள் கலந்து கொண்டனர். நிகழ்ச்சி ஏற்பாடுகளை பள்ளி தலைமை ஆசிரியர் சுரேஷ்குமார், உதவி தலைமை ஆசிரியர் சுதாகரன், உடற்கல்வி இயக்குனர் ஆனந்த பிரபாகரன் மற்றும் ஆசிரியர்கள் செய்திருந்தனர். கலால் வருவாய் ஆய்வாளர் முத்து கண்ணன் நன்றி கூறினார்.

மேலும் செய்திகள்