< Back
மாநில செய்திகள்
தூத்துக்குடி
மாநில செய்திகள்
கோவில்பட்டி, உடன்குடியில் மனித சங்கிலி போராட்டம்
|12 Oct 2022 12:15 AM IST
கோவில்பட்டி, உடன்குடியில் மனித சங்கிலி போராட்டம் நடந்தது.
கோவில்பட்டி:
சமூக நல்லிணக்கத்தை வலியுறுத்தி கோவில்பட்டி பயணிகள் விடுதி முன்பு நடந்த மனித சங்கிலியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு மாவட்ட செயற்குழு உறுப்பினர் கே.சீனிவாசன் தலைமை தாங்கினார். இதில்பல்வேறு கட்சிகளை சார்ந்தவர்கள் கோவில்பட்டி மெயின் ரோடு ஆனந்தா விடுதி முதல் இளையரச னேந்தல் ரோடு சந்திப்பு வரை மனித சங்கிலியாக நின்றனர். அப்போது அனைவரும் மதநல்லிணக்கத்தை வலியுறுத்தி கோஷமிட்டனர்.
இதேபோன்று சமூக நல்லிணக்கத்தை வலியுறுத்தி நேற்று மாலையில் உடன்குடிபஸ் நிலையம் பகுதியில் மனித சங்கிலிபோராட்டம் நடைபெற்றது. போராட்டத்தில் உடன்குடி ஒன்றிய மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு செயலர் ஆறுமுகம் உட்பட பலர் கலந்துகொண்டனர்.