< Back
மாநில செய்திகள்
கோவில்பட்டியில் ம.தி.மு.க.வினர் கையெழுத்து இயக்கம்
தூத்துக்குடி
மாநில செய்திகள்

கோவில்பட்டியில் ம.தி.மு.க.வினர் கையெழுத்து இயக்கம்

தினத்தந்தி
|
28 July 2023 12:15 AM IST

கோவில்பட்டியில் ம.தி.மு.க.வினர் கையெழுத்து இயக்கம் நடந்தது.

கோவில்பட்டி:

தமிழக அரசுக்கு ஒத்துழைப்பு கொடுக்காமல், மன உளைச்சலை ஏற்படுத்தும் கவர்னர் ரவியை திரும்ப பெற வலியுறுத்தி கோவில்பட்டி அண்ணா பஸ் நிலையம், கூடுதல் பஸ் நிலையத்தில் தூத்துக்குடி வடக்கு மாவட்ட ம.தி.மு.க. செயலாளர் ஆர். எஸ். ரமேஷ் தலைமையில் கையெழுத்து இயக்கம் நடைபெற்றது. பொதுமக்கள், இளைஞர்கள் ஆர்வத்துடன் கையெழுத்து போட்டனர். இந்த நிகழ்ச்சியில் தூத்துக்குடி வடக்கு மாவட்ட இளைஞரணி செயலாளர் விநாயகா ரமேஷ், மாவட்ட துணை செயலாளர் பவுன் மாரியப்பன் மற்றும் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

Related Tags :
மேலும் செய்திகள்