< Back
மாநில செய்திகள்
தூத்துக்குடி
மாநில செய்திகள்
கொம்மடிக்கோட்டை கோவிலில் வராஹி அம்மன் ஆஷாட நவராத்திரி விழா
|21 Jun 2023 12:15 AM IST
கொம்மடிக்கோட்டை கோவிலில் வராஹி அம்மன் ஆஷாட நவராத்திரி விழா தொடங்கியது.
தட்டார்மடம்:
தட்டார் மடம் அருகே உள்ள கொம்மடிக்கோட்டை வாலைகுருசுவாமி கோவிலில் வராஹி அம்மன் தனி சன்னதியில் எழுந்தருளி அருள்பாலிக்கிறார். ஆஷாட நவராத்திரி காலம் என்பது சந்திரமான கால கணிதமுறையில் ஆனி மாதத்தில் தொடங்குகிற அமாவாசையை அடுத்த பிரதமை முதல் நவமி வரையிலான காலமாகும். இந்த காலத்தில் இக்கோவிலில் ஆண்டுதோறும் வராஹிஅம்மனுக்கு 9 நாட்கள் ஆஷாட நவராத்திரி விழா கொண்டாடப்படுகிறது. இவ்விழாவை முன்னிட்டு நேற்று வராஹி அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் நடந்தது. தொடர்ந்து பரிவார தெய்வங்களுக்கு சிறப்பு அபிஷேகம், ஆராதனை, சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. வருகிற 26-ந்தேதி வரை இவ்விழா கொண்டாடப்படுகிறது. ஆஷாட நவராத்திரி நாட்களில் வராஹி அம்மனுக்கு பல்வேறு வகையான திரவியங்களால் அபிஷேகம் நடைபெற்று, வெவ்வேறு சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலிப்பார்.