< Back
மாநில செய்திகள்
கிளாம்பாக்கம் பஸ் நிலையம் எதிரே ஜி.எஸ்.டி. சாலையில் ஆறு போல் பெருக்கெடுத்து ஓடிய மழைநீரால் பொதுமக்கள் அவதி
செங்கல்பட்டு
மாநில செய்திகள்

கிளாம்பாக்கம் பஸ் நிலையம் எதிரே ஜி.எஸ்.டி. சாலையில் ஆறு போல் பெருக்கெடுத்து ஓடிய மழைநீரால் பொதுமக்கள் அவதி

தினத்தந்தி
|
14 Nov 2022 1:18 PM IST

கிளாம்பாக்கம் பஸ் நிலையம் எதிரே ஜி.எஸ்.டி. சாலையில் ஆறு போல் பெருக்கெடுத்து ஓடிய மழைநீரால் பொதுமக்கள் அவதிக்குள்ளானார்கள்.

பெருக்கெடுத்து ஓடியமழை வெள்ளம்

செங்கல்பட்டு மாவட்டத்தில் நேற்று முன்தினம் இரவு முதல் காலை வரை விட்டுவிட்டு பெய்த மழையின் காரணமாக கிளாம்பாக்கம் புறநகர் பஸ் நிலையம் எதிரே உள்ள ஜி.எஸ்.டி. சாலையில் மழை நீர் ஆறு போல் பெருக்கெடுத்து ஓடியது. இதனால் கோயம்பேடு, சென்னை மற்றும் புறநகர் பகுதியில் இருந்து தென் மாவட்டங்களுக்கு செல்லும் அனைத்து வாகனங்களும் ஆமை வேகத்தில் ஊர்ந்து சென்றன. இதன் காரணமாக மோட்டார் சைக்கிளில் சென்ற வாகன ஓட்டிகள் பெரிதும் அவதிக்குள்ளானார்கள்.

கோரிக்கை

இதுகுறித்து வாகன ஓட்டிகள் கூறியதாவது:-

கடந்த சில நாட்களுக்கு முன்பு இதே போல கிளாம்பாக்கம் பஸ் நிலைய ஜி.எஸ்.டி. சாலையில் மழை நீர் ஆறு போல் பெருக்கெடுத்து ஓடியது. இதனை தொடர்ந்து அந்த பகுதியில் தலைமை செயலாளர் இறையன்பு நேரில் வந்து ஆய்வு செய்து இனிமேல் மழைக்காலங்களில் தண்ணீர் தேங்காதவாறு நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்திருந்தார். ஆனால் தற்போது தொடர்ந்து சில மணி நேரம் விடாமல் மழை பெய்யும் போது மீண்டும் அதே இடத்தில் தண்ணீர் தேங்கி நிற்கிறது.

இதற்கு அதிகாரிகள் தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர்.

மேலும் செய்திகள்