< Back
மாநில செய்திகள்
தேனி
மாநில செய்திகள்
கெங்குவார்பட்டி பகுதியில் மோட்டார் சைக்கிள்கள் திருட்டு
|7 Nov 2022 12:15 AM IST
கெங்குவார்பட்டி பகுதியில் மோட்டார்சைக்கிள் திருடுபோனது
தேவதானப்பட்டி அருகே உள்ள கெங்குவார்பட்டி பகுதியில் கடந்த சில நாட்களாக மோட்டார் சைக்கிள் திருட்டு அதிக அளவில் நடைபெற்று வருகிறது. நேற்று முன்தினம் கெங்குவார்பட்டியில் ரபிக் என்பவர் தனது வீட்டின் முன்பு மோட்டார்சைக்கிளை நிறுத்தியிருந்தார். அதனை மர்ம நபர் திருடி சென்று விட்டார். இதேபோல் ஜி.கல்லுப்பட்டியில் 3 பேரின் மோட்டார் சைக்கிள்கள் திருடுபோனது. இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். எனவே மோட்டார்சைக்கிள் திருட்டை தடுக்க போலீசார் இரவு நேர ரோந்து பணியை தீவிரப்படுத்த வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.