< Back
மாநில செய்திகள்
தூத்துக்குடி
மாநில செய்திகள்
கயத்தாறில் ஊரக வளர்ச்சித்துறையினர் கண்டன ஆர்ப்பாட்டம்
|8 July 2023 12:15 AM IST
கயத்தாறில் ஊரக வளர்ச்சித்துறையினர் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது.
கயத்தாறு:
கயத்தாறு பஞ்சாயத்து யூனியன் அலுவலகம் முன்பு தமிழ்நாடு ஊரக வளர்ச்சித்துறை சங்கத்தின் சார்பில் மாவட்ட ஊரக வளர்ச்சி துறை பொருளாளர் சுப்பையா தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ராமநாதபுரம் மாவட்ட கலெக்டரின் நேர்முக உதவியாளர், அந்த மாவட்டத்தில் பணிபுரியும் 242 ஊழியர்களை ஒட்டு மொத்தமாக பணியிட மாறுதல் ெசய்துள்ளார். எவ்வித முன்னறிவிப்பும் இல்லாமலும், சுட்டிகாட்டும் அளவில் குறைகள் இல்லாத போது இந்த பணியிட மாறுதல் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதனை கண்டித்து அந்த ஊழியர்கள் கடந்த மூன்று நாட்களாக காத்திருப்பு போராட்டம் நடத்தி வருகின்றனர். அந்த ஊழியர்களுக்கு ஆதரவாக இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் கயத்தாறு வட்டார தலைவர் சிங்கராஜ், வட்டார செயலாளர் மகாராஜன் மற்றும் ஊழியர்கள் கலந்து கொண்டனர்.