< Back
மாநில செய்திகள்
கயத்தாறில் வெறிநாய் கடி சிறப்பு மருத்துவ முகாம்
தூத்துக்குடி
மாநில செய்திகள்

கயத்தாறில் வெறிநாய் கடி சிறப்பு மருத்துவ முகாம்

தினத்தந்தி
|
30 Sept 2023 12:15 AM IST

கயத்தாறில் வெறிநாய் கடி சிறப்பு மருத்துவ முகாம் நடந்தது.

கயத்தாறு:

கயத்தாறில் கால்நடை மருத்துவமனையில் வெறிநாய் கடி தடுப்பூசி சிறப்பு முகாம் நடைபெற்றது. இந்த முகாமிற்கு கால்நடை பராமரிப்பு துறை உதவி இயக்குனர் விஜயஸ்ரீ தலைமை தாங்கினார். முகாமை கயத்தாறு பேரூராட்சி மன்ற தலைவர் சுப்புலட்சுமி ராஜதுரை தொடங்கி வைத்தார். இதில் நூற்றுக்கும் மேற்பட்ட நாய்களுக்கு ரேப்பீஸ் நோய் தடுப்பூசி மற்றும் குடற்புழு நீக்கம் மாத்திரைகள் அனைத்து நாய்களுக்கும் வழங்கப்பட்டது. இதில் கயத்தாறு தெற்கு இலந்தைகுளம், வடக்கு இலந்தைகுளம், மானங்காத்தான், அய்யனார்ஊத்து, வட சுப்பிரமணியபுரம், தெற்கு சுப்பிரமணியபுரம், அகிலாண்டபுரம், கரிசல்குளம், சத்திரப்பட்டி, உள்பட 20-க்கும் மேற்பட்ட கிராமங்களில் இருந்து நூற்றுக்கும் மேற்பட்ட நாய்கள் கொண்டு வரப்பட்டு, தடுப்பூசி போடப்பட்டது. குடற்புழு நீக்குதல் மற்றும் மாத்திரைகளும் வழங்கப்பட்டது. இதில் தி.மு.க. தூத்துக்குடி வடக்கு மாவட்ட சுற்றுச்சூழல் அணி துணை அமைப்பாளர் ராஜதுரை, கால்நடை மருத்துவர்கள் மனோஜ்குமார், சுந்தர்செல்வம், அபிஷேக், புனிதா, சுப்பிரியா, ராஜ்பாபு, கண்ணபிரான், ராகுல்கிருஷ்ணகாந்த், மற்றும் மருத்துவ குழுவினர் 50-க்கும் மேற்பட்டோர் செவிலியர்கள் கலந்து கொண்டனர். முகாம் ஏற்பாடுகளை கயத்தாறு கால்நடை மருதுவமணை மருத்துவர் மனோஜ் குமார் மற்றும் அலுவலக பணியாளர்கள் செய்திருந்தனர்.

மேலும் செய்திகள்