தூத்துக்குடி
கயத்தாறில்22 விநாயகர் சிலைகள் ஊர்வலம்
|கயத்தாறில் 22 விநாயகர் சிலைகள் ஊர்வலமாக கொண்டு செல்லப்பட்டு கடலில் கரைக்கப்பட்டன.
கயத்தாறு:
விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு கயத்தாறில் காந்தாரி அம்மன் கோவில் தெரு, சுடலைமாடன் கோவில் தெரு, புதுக்கோட்டை, அயிரவன்பட்டி, திருமங்களக்குறிச்சி, பன்னீர் குளம், அகிலாண்டபுரம், காப்புலிங்கம்பட்டி, குமரகிரி, வெள்ளாளன்கோட்டை, சூரியமினிக்கன், வடக்கு இலந்தைகுளம், தெற்கு இலந்தைகுளம், நாகலாபுரம், அய்யனார்ஊத்து, உசிலாங்குளம் உள்பட 22 கிராமங்களில் இந்து முன்னணி சார்பில் விநாயகர் சிலைகள் பிரதிஷ்டை செய்யப்பட்டு இருந்தது. தினமும் விநாயகர் சிலைகளுக்கு சிறப்பு பூஜைகள், தீபாராதனைகள் காட்டப்பட்டு வந்தது. நேற்று சுற்று வட்டாரத்திலிருந்து அனைத்து விநாயகர் சிலைகளும் வாகனங்களில் கயத்தாறு அகிலாண்ட ஈஸ்வரி அம்மன் கோவில் முன்பு கொண்டு வரப்பட்டன. அங்கு இந்து முன்னணி சார்பில் பொதுக்கூட்டம் நடைபெற்றது. பின்னர் அங்கிருந்து விநாயகர் சிலைகள் ஊர்வலம் புறப்பட்டது. இதை கயத்தாறு பேரூராட்சி மன்றத் தலைவர் சுப்புலட்சுமி ராஜதுரை கொடி அசைத்து தொடங்கி வைத்தார். அனைத்து சிலைகளும் திருச்செந்தூர் கொண்டு செல்லப்பட்டு, கடலில் கரைக்கப்பட்டன.