< Back
மாநில செய்திகள்
கயத்தாறில் ரூ.2.80 லட்சத்தில் கட்டப்பட்டுள்ள புதிய நீர்தேக்க தொட்டி திறப்பு விழா
தூத்துக்குடி
மாநில செய்திகள்

கயத்தாறில் ரூ.2.80 லட்சத்தில் கட்டப்பட்டுள்ள புதிய நீர்தேக்க தொட்டி திறப்பு விழா

தினத்தந்தி
|
21 Oct 2023 12:15 AM IST

கயத்தாறில் ரூ.2.80 லட்சத்தில் கட்டப்பட்டுள்ளபுதிய நீர்தேக்க தொட்டி திறப்பு விழா நடந்தது.

கயத்தாறு:

கயத்தாறில் ரூ.2.80 லட்சத்தில் கட்டப்பட்டுள்ள புதிய நீர்தேக்க தொட்டி திறப்புவிழா நடந்தது.

நீர்தேக்க தொட்டி

கயத்தாறு பேரூராட்சி சக்தி விநாயகர் கோவில் தெருவில் பேரூராட்சி பொது நிதியியல் இருந்து ரூ.2.80 லட்சம் மதிப்பீட்டில் புதிய மின் மோட்டார், மேல் நிலை நீர்த்தேக்க தொட்டி கட்டப்பட்டுள்ளது. இந்த தொட்டியை பேரூராட்சி மன்ற தலைவர் சுப்புலட்சுமி ராஜதுரை ரிப்பன் வெட்டி திறந்து வைத்தார். இந்த நிகழ்ச்சிக்கு பேரூராட்சி மன்றத் துணைத் தலைவர் சபுராசலீமா மற்றும் வார்டு உறுப்பினர் மாரியம்மாள் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இந்த நிகழ்ச்சிக்கு கயத்தாறு தி.மு.க. கிழக்கு ஒன்றிய செயலாளர் சின்ன பாண்டியன் தலைமை தாங்கினார். தூத்துக்குடி வடக்கு மாவட்ட தி.மு.க. சுற்றுச்சூழல் அணி துணை அமைப்பாளர் ராஜதுரை, வார்டு உறுப்பினர்கள் நயினார் பாண்டியன் தேவி கண்ணன், ஆதிலட்சுமி அந்தோணி, வார்டு செயலாளர்கள் சந்தன அந்தோணிராஜ், ராஜ், சக்தி மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

மாற்றுத்திறனாளிகளுக்கு...

மேலும், கயத்தாறு வட்டார ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வித்துறை சார்பில் கயத்தாறு வட்டார வள மையத்தில் 18 வயது வரையிலான மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கு இலவச கண் சிகிச்சை முகாம் நடைபெற்றது. இதில் டாக்டர் கமலா கலந்து கொண்டு மாணவ, மாணவிகளுக்கு கண்பரிசோதனை செய்தார்.

இந்த முகாமை கயத்தாறு பேரூராட்சி மன்றத் தலைவர் சுப்புலட்சுமி ராஜதுரை தொடங்கி வைத்து, 86 மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கு கண் கண்ணாடிகளை வழங்கினார்.

கலந்து கொண்டவர்கள்

இந்த நிகழ்சியில் தூத்துக்குடி வடக்கு மாவட்ட தி.மு.க.சுற்றுச்சூழல் அணி மாவட்ட துணை அமைப்பாளர் ராஜதுரை, வட்டார வளமைய மேற்பார்வையாளர் சிதம்பரம், வட்டார கல்வி அலுவலர் கணேசன், அரசு மேல்நிலைப் பள்ளி தலைமையாசிரியர் சுதா, உடற்கல்விஆசிரியர் சுரேஷ், பயிற்றுனர்கள் செந்தாமரைக்கனண்ணன், மோகன் முருகன், நாயகம், ராதா டெல்லா, ஜான்சி, ராணி மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

மேலும் செய்திகள்