< Back
மாநில செய்திகள்
காயல்பட்டினத்தில்கட்டிட தொழிலாளிக்கு அரிவாள் வெட்டு
தூத்துக்குடி
மாநில செய்திகள்

காயல்பட்டினத்தில்கட்டிட தொழிலாளிக்கு அரிவாள் வெட்டு

தினத்தந்தி
|
10 Oct 2023 12:15 AM IST

காயல்பட்டினத்தில் கட்டிட தொழிலாளிக்கு அரிவாள் வெட்டு விழுந்தது.

ஆறுமுகநேரி:

காயல்பட்டினம் லட்சுமி புரத்தில் வசித்து வருபவர் மணிமகன் முத்துகிருஷ்ணன் (வயது 49). இவருக்கு சித்ரா என்ற மனைவியும் 2 மகன்கள், 2 மகள்கள் உள்ளனர். இவர் கட்டிட தொழிலாளியாக வேலைபார்த்து வருகிறார். நேற்று முன்தினம் இரவு 9 மணி அளவில் அவரது வீடு முன்பு நின்று கொண்டு அவர் நின்று கொண்டிருந்துள்ளார். அப்போது அங்கு வந்த கூட்டாம்புளியை சேர்ந்த சுயம்புலிங்கம் மகன்கள் அழகு லிங்கம், வீரமணி ஆகியோர் அரிவாளால் அவரை சரமாரியாக வெட்டியுள்ளனர்.

இதில் படுகாயம் அடைந்த முத்துக்கிருஷ்ணன் அலறியவாறு ரத்தவெள்ளத்தில் கீழே விழுந்துள்ளார். அவரது சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் திரண்டு வருவதை பார்த்த அண்ணன், தம்பி இருவரும் இருளில் தப்பி ஓடி தலைமறைவாகி விட்டனர். அவரை உறவினர்கள் மீட்டு திருச்செந்தூரில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு அவருக்கு

தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இது தகவல் அறிந்த ஆறுமுகநேரி போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் வேல்பாண்டியன் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தினார். இதில், பக்கத்தில் வாடகை வீட்டில் வசித்து வரும் அழகுமுத்துலிங்கமும், வீரமணியும் முன்விரோதத்தில் அவரை அரிவாளால் வெட்டியது தெரியவந்தது. இதுகுறித்து ஆறுமுகநேரி போலீசார் வழக்குப்பதிவு செய்து தலைமறைவாக உள்ள அழகுலிங்கத்தையும், அவரது தம்பி வீரமணியையும் தேடிவருகின்றனர்.

மேலும் செய்திகள்