< Back
மாநில செய்திகள்
கரூரில், கிருஷ்ணர் சிலைகள் விற்பனை மும்முரம்
கரூர்
மாநில செய்திகள்

கரூரில், கிருஷ்ணர் சிலைகள் விற்பனை மும்முரம்

தினத்தந்தி
|
19 Aug 2022 12:06 AM IST

கரூரில், கிருஷ்ணர் சிலைகள் விற்பனை மும்முரமாக நடந்தது.

கரூர் மாவட்டத்தில் இந்துக்களால் கொண்டாடப்படும் முக்கிய பண்டிகைகளில் ஒன்று கிருஷ்ண ஜெயந்தி விழாவும் ஒன்றாகும். ஆவணிமாதம் தேய்பிறையின் 8-ம் நாள் ரோகிணி நட்சத்திரத்தில் கிருஷ்ணஜெயந்தி விழா இந்துக்களால் வெகு சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது. இந்நிலையில் வீடு மற்றும் அலுவலகங்களில் பல வண்ணங்களில் கிருஷ்ணரின் சிலைகள் மற்றும் படங்களை அலங்கரித்து அவர் விரும்பி உண்ணும் நெய் படையல் வைத்து வழிபடுவது வழக்கம். இந்நிலையில் கிருஷ்ணஜெயந்தி விழா இன்று (வெள்ளிக்கிழமை) கொண்டாடப்படுகிறது. இதனால் நேற்று கரூர் கோவைரோடு, ஜவகர் பஜார், வெங்கமேடு, பசுபதிபாளையம் திருமாநிலையூர் உள்ளிட்ட இடங்களில் உள்ள கடைகள் மற்றும் தரை கடைகளில் கிருஷ்ணர் சிலை விற்பனை மும்முரமாக நடந்தது. இதனை பொதுமக்கள் ஆர்வத்துடன் வாங்கி சென்றனர். இதுகுறித்து கரூர் திருமாநிலையூரை சேர்ந்த வியாபாரி ஒருவர் கூறுகையில், கடந்த சில ஆண்டுகளை காட்டிலும், இந்தாண்டு கிருஷ்ணரின் சிலைகளை பொதுமக்கள் அதிக அளவில் வாங்கி செல்கின்றனர். இதனால் வியாபாரம் நன்றாக உள்ளது என்றார்.

மேலும் செய்திகள்