< Back
மாநில செய்திகள்
கரூரில், கோடைகால விளையாட்டு போட்டிகள் தொடக்கம்
கரூர்
மாநில செய்திகள்

கரூரில், கோடைகால விளையாட்டு போட்டிகள் தொடக்கம்

தினத்தந்தி
|
4 May 2023 12:01 AM IST

கரூரில், கோடைகால விளையாட்டு போட்டிகள் தொடங்கி உள்ளது.

கரூர் விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் சார்பில் மாவட்ட விளையாட்டு மைதானத்தில் கோடைகால விளையாட்டு போட்டிகளுக்கான சிறப்பு பயிற்சியினை கலெக்டர் பிரபுசங்கர் தொடங்கி வைத்து பேசினார். அப்போது அவர் கூறுகையில், கரூர் மாவட்ட விளையாட்டு அரங்கில் தடகளம், கூடைப்பந்து, கையுந்து பந்து கால்பந்து, வளைக்கோள் பந்து, ஜூடோ மற்றும் மல்யுத்தம் ஆகிய விளையாட்டு போட்டிகளுக்காக சுமார் 200--க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் பங்கு பெறும் கோடைகால பயிற்சி முகாம் 15 நாட்கள் நடைபெற உள்ளது. இந்த பயிற்சி முகாமினை மாணவ, மாணவிகள் நல்ல முறையில் பயிற்சி பெற்று பின்னர் தேசிய அளவில் விளையாடுவதற்கான வழிமுறைகளை பின்பற்றி சிறப்பாக விளையாட வேண்டும், என்றார்.

மேலும் செய்திகள்