< Back
மாநில செய்திகள்

மாநில செய்திகள்
கரூரில் பட்டியல் சமூகத்தினரை கோவிலுக்குள் அனுமதிக்காத விவகாரம் - வருத்தம் தெரிவித்த பூசாரி

16 July 2023 4:30 PM IST
இருதரப்பினரையும் அழைத்து வெள்ளியனை காவல் ஆய்வாளர் ஓம் பிரகாஷ் விசாரித்தார்.
கரூர்,
கரூர் மாவட்டம் உப்பிடமங்கலம் பகுதியில் உள்ள மாரியம்மன் கோவிலில் பட்டியல் சமூகத்தினரை அனுமதிக்க முடியாது என கோவில் பூசாரி பேசிய வீடியோ சமூக வலைதளங்களில் பரவியது. இந்த விவகாரம் தொடர்பாக சம்பந்தப்பட்ட நபர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கைகள் எழுந்தன.
இது தொடர்பான செய்தி தந்தி கொலைக்காட்சியில் ஒளிபரப்பான நிலையில், கரூர் மாவட்ட கலெக்டர் பிரபு சங்கர், எஸ்.பி. சுந்தரவதனம் உத்தரவின் பேரில் இந்த விவகாரத்தில் தொடர்புடைய இருதரப்பினரையும் அழைத்து வெள்ளியனை காவல் ஆய்வாளர் ஓம் பிரகாஷ் விசாரித்தார். அப்போது கோவில் பூசாரி தனது பேச்சுக்கு வருத்தம் தெரிவித்ததை தொடர்ந்து இருதரப்பினரிடையே சமாதானம் ஏற்பட்டது.