< Back
மாநில செய்திகள்
கரூரில், ஏலத்திற்கு வந்த 6 அடி உயர வாழைத்தார்
கரூர்
மாநில செய்திகள்

கரூரில், ஏலத்திற்கு வந்த 6 அடி உயர வாழைத்தார்

தினத்தந்தி
|
25 Nov 2022 12:09 AM IST

கரூரில், நேற்று நடந்த ஏலத்திற்கு 6 அடி உயர வாழைத்தார் வந்தது.

கரூர் ரெயில் நிலையம் அருகே வாழை மண்டி செயல்பட்டு வருகிறது. இங்கு தினமும் கரூர் மாவட்டத்திற்கு உட்பட்ட லாலாபேட்டை, மாயனூர், கிருஷ்ணராயபுரம், வாங்கல், நாமக்கல் மாவட்டம் உள்ளிட்ட பகுதிகளில் இருந்து பூவன், ரஸ்தாலி, கற்பூரவல்லி உள்ளிட்ட வாழைத்தார்கள் விற்பனைக்கு கொண்டு வரப்பட்டு ஏலம் விடப்படுகிறது. இந்நிலையில் நேற்று வாழைக்காய் மண்டி ஏலத்திற்கு நாமக்கல் மாவட்டம் மோகனூரில் இருந்து 6 அடி உயரமுள்ள கற்பூரவல்லி வாழைத்தார் ஏலத்திற்கு வந்தது. பொதுவாக ஒரு வாழைத்தாரில் 10 சீப்புகள் வரை இருக்கும். ஆனால் இந்த வாழைத்தாரில் 16 சீப்புகள் இருந்தன. இதனை அப்பகுதி பொதுமக்கள் ஆச்சரியத்துடன் வந்து பார்த்து சென்றனர்.

மேலும் செய்திகள்