கன்னியாகுமரியில் கனிம வளங்களை கடத்திய லாரிகளை சிறை பிடித்த மக்கள்
|கன்னியாகுமரியில் கனிமவள கடத்தலில் ஈடுபட்ட லாரிகளை பொதுமக்கள் சிறைபிடித்து போலீசில் ஒப்படைத்தனர்.
கன்னியாகுமரி,
கன்னியாகுமரியில் கனிமவள கடத்தலில் ஈடுபட்ட லாரிகளை பொதுமக்கள் சிறைபிடித்து போலீசில் ஒப்படைத்தனர்.
கன்னியாகுமரி மற்றும் நெல்லை மாவட்டத்தில் இருந்து கேரளாவிற்கு கருங்கல், சல்லி, மணல் உள்ளிட்ட கனிம வளங்கள் கடத்தப்படுவதாக குற்றச்சாட்டு இருந்து வருகிறது. இந்த நிலையில் குலசேகரம் அருகே கேரளாவுக்கு கனிம வளங்கள் ஏற்றிச்சென்ற 10-க்கும் மேற்பட்ட லாரிகளை பொது மக்கள் சிறைபிடித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.
தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார், லாரிகளில் சோதனை செய்தனர். அப்போது அங்கு பொது மக்களுக்கும் லாரி உரிமையாளர்களுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டு கைகலப்பாக மாறியது. இதையடுத்து, அவர்களை கலைத்து விட்ட போலீசார், லாரிகளில் சோதனையிட்ட போது அதிக பாரம் ஏற்றி வந்தது தெரிய வந்தது. அதனை தொடர்ந்து, போலீசார் லாரிகளை பறிமுதல் செய்து, மேற்கொண்டு விசாரணை நடத்தி வருகின்றனர்.