< Back
மாநில செய்திகள்
காஞ்சீபுரம் மாவட்டத்தில் மாற்றுத்திறனாளிகள் ரூ.2 ஆயிரம் உதவித்தொகை பெற விண்ணப்பிக்கலாம் - கலெக்டர் தகவல்
காஞ்சிபுரம்
மாநில செய்திகள்

காஞ்சீபுரம் மாவட்டத்தில் மாற்றுத்திறனாளிகள் ரூ.2 ஆயிரம் உதவித்தொகை பெற விண்ணப்பிக்கலாம் - கலெக்டர் தகவல்

தினத்தந்தி
|
29 Dec 2022 9:14 PM IST

காஞ்சீபுரம் மாவட்டத்தில் மாற்றுத்திறனாளிகள் ரூ.2 ஆயிரம் உதவித்தொகை பெற விண்ணப்பிக்கலாம் என்றும், ஆதார் நகலை கட்டாயம் இணைக்க வேண்டும் என்றும் காஞ்சீபுரம் கலெக்டர் தெரிவித்துள்ளார்.

காஞ்சீபுரம் மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலகத்தின் மூலம் மாதாந்திர பராமரிப்பு உதவித்தொகை ரூ.2 ஆயிரம் தொடர்ந்து பெற மாற்றுத்திறனாளி அடையாள அட்டையுடன் ஆதார் நகல் அவசியம் என மாவட்ட கலெக்டர் டாக்டர் மா.ஆர்த்தி தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியதாவது:-

மாற்றுத்திறனாளிகள் நல ஆணையர், கடிதத்தின்படி மாதாந்திர பராமரிப்பு உதவித்தொகை வழங்கும் திட்டத்தின் கீழ் மனவளச்சி குன்றிய மாற்றுத்திறனாளி, கடுமையாக பாதிக்கப்பட்டவர், முதுகு தண்டுவடம் பாதிக்கப்பட்டோர், தொழுநோயால் பாதிக்கப்பட்டவர் மற்றும் தசைசிதைவு நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு மாதம் ரூ.2 ஆயிரம் பராமரிப்பு உதவித்தொகை மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலகம் மூலம் வழங்கப்பட்டு வருகிறது.

இந்த பராமரிப்பு உதவித்தொகை மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலகத்தின் மூலம் தொடர்ந்து பெற வேண்டுமாயின், உடனடியாக மாற்றுத்திறனாளிகளுக்கான மருத்துவ சான்றுடன் கூடிய அடையாள அட்டை நகல், குடும்ப அட்டை நகல், ஆதார் அட்டை நகல், வங்கி புத்தக நகல், புகைப்படம்-1 மனவளர்ச்சி குன்றியோராக இருப்பின் பெற்றோர்களுடன் இணைந்த புகைப்படம்-1 தனித்துவம் வாய்ந்த, தேசிய அடையாள அட்டை பெற்றிருப்பின் அதன் நகல் ஆகிய குறிப்பிட்டுள்ள அனைத்து நகல்களும் இணைத்து மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலகம், தரை தளம், மாவட்ட கலெக்டர் அலுவலகம், காஞ்சீபுரம் என்ற முகவரிக்கு நேரிலோ அல்லது தபால் மூலமாகவோ அடுத்த மாதம் 6-ந்தேதிக்குள் சமர்ப்பிக்க வேண்டும்.

மேலும் விவரங்களுக்கு 044-29998040 என்ற எண்ணிற்கு அணுகலாம். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

மேலும் செய்திகள்