< Back
மாநில செய்திகள்
கள்ளக்குறிச்சியில்  பெண்ணிடம் தங்க சங்கிலி பறிப்பு
கள்ளக்குறிச்சி
மாநில செய்திகள்

கள்ளக்குறிச்சியில் பெண்ணிடம் தங்க சங்கிலி பறிப்பு

தினத்தந்தி
|
18 Oct 2022 12:15 AM IST

கள்ளக்குறிச்சியில் பெண்ணிடம் தங்க சங்கிலி பறித்தது தொடா்பாக போலீசாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.

கள்ளக்குறிச்சி அண்ணா நகரை சேர்ந்தவர் கொளஞ்சி மனைவி சுமதி (வயது 42). இவரும் அதே பகுதியை சேர்ந்த கணேசன் மனைவி புஷ்பா (47) என்பவரும், ஒரு மொபட்டில் நேற்று மாலை கள்ளக்குறிச்சி புறவழிச்சாலையில் துருகம் மார்க்கமாக சென்று கொண்டிருந்தனர். மொபட்டை சுமதி ஓட்டினார். அப்பகுதியில் உள்ள தனியார் பள்ளி அருகே சென்று கொண்டிருந்தபோது, பின்னால் மோட்டார் சைக்கிளில் வந்த 2 பேர் புஷ்பாவின் கழுத்தில் கிடந்த 1½ பவுன் சங்கிலியை பறித்துக்கொண்டு தப்பி சென்றனர். இதுகுறித்த புகாரின்பேரில் கள்ளக்குறிச்சி போலீசார் வழக்குப்பதிவு செய்து 2 மர்மநபர்களையும் வலைவீசி தேடி வருகின்றனர்.

மேலும் செய்திகள்