< Back
மாநில செய்திகள்
கடமலைக்குண்டு கிராமத்தில்ரூ.12 லட்சத்தில் குடிநீர் குழாய்கள் பதிக்கும் பணி :அதிகாரிகள் ஆய்வு
தேனி
மாநில செய்திகள்

கடமலைக்குண்டு கிராமத்தில்ரூ.12 லட்சத்தில் குடிநீர் குழாய்கள் பதிக்கும் பணி :அதிகாரிகள் ஆய்வு

தினத்தந்தி
|
7 July 2023 12:15 AM IST

கடமலைக்குண்டு கிராமத்தில் ரூ.12 லட்சத்தில் நடைபெற்ற குடிநீர் குழாய்கள் பதிக்கும் பணியை அதிகாரிகள் ஆய்வு செய்தனர்.

கடமலைக்குண்டு கிராமத்தில் 3 ஆயிரத்திற்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இந்த கிராமத்திற்கு மூலவைகை ஆற்றில் உறை கிணறு அமைத்து குடிநீர் வினியோகம் செய்யப்பட்டு வருகிறது. போதிய அளவு மழை இல்லாத காரணத்தால் கடந்த 3 மாதங்களாக ஆறு வறண்ட நிலையில் காணப்படுகிறது. மேலும் வெயிலின் தாக்கம் அதிகரித்துள்ளதால் உறை கிணறுகளில் நீர்மட்டம் தொடர்ந்து குறைந்து கொண்டே வந்தது. இதனால் விரைவில் கடமலைக்குண்டு கிராமத்தில் குடிநீர் தட்டுப்பாடு ஏற்படும் அபாயம் நிலவியது.

இதையடுத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக ஆற்றில் புதிதாக உறை கிணறு அமைக்கப்பட்டது. இதைத்தொடர்ந்து 15-வது நிதிக்குழு மானியத்தில் இருந்து ரூ.12 லட்சம் மதிப்பில் உறை கிணற்றில் இருந்து 1 லட்சம் லிட்டர் கொள்ளளவு கொண்ட மேல்நிலை குடிநீர் தொட்டிக்கு புதிதாக குடிநீர் குழாய்கள் பதிக்கும் பணி நடைபெற்று வருகிறது. இந்த பணியை ஒன்றிய ஆணையர் இளங்கோவன் நேற்று ஆய்வு செய்தார். அப்போது விரைவில் பணிகளை முடித்து பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும் என்று அதிகாரிகளுக்கு அவர் அறிவுறுத்தினார். ஆய்வின்போது, கடமலைக்குண்டு ஊராட்சி மன்ற தலைவர் சந்திராதங்கம், ஊராட்சி செயலர் சின்னசாமி மற்றும் அதிகாரிகள் உடன் இருந்தனர்.

Related Tags :
மேலும் செய்திகள்