< Back
மாநில செய்திகள்
தேனி
மாநில செய்திகள்
தேனியில் ஆக்கிரமிப்புகளை அகற்றி வடிகால் தூர்வாரும் பணி
|16 Sept 2022 8:10 PM IST
தேனியில் ஆக்கிரமிப்புகளை அகற்றி வடிகால் தூர்வாரும் பணி தொடங்கியது
தேனி அல்லிநகரம் நகராட்சிக்கு உட்பட்ட பொம்மையகவுண்டன்பட்டியில் இருந்து நேரு சிலை சிக்னல் வரை சாலையின் இருபுறமும் மழைநீர் வடிகால் அமைந்துள்ளது. இந்த மழைநீர் வடிகால் பல ஆண்டுகளாக தூர்வாரப்படாமல் உள்ளது. வடிகால் பகுதியில் ஆக்கிரமிப்புகளும் அதிகரித்துள்ளது. இதனால் மழைக்காலங்களில் மழைநீர் வடிந்து செல்ல வழியின்றி சாலையில் தேங்கி வந்தது.
இதையடுத்து நகராட்சி நிர்வாகம் சார்பில், சாலையோர ஆக்கிரமிப்புகளை அகற்றி வடிகாலை தூர்வார திட்டமிடப்பட்டது. அதன்படி பொம்மையகவுண்டன்பட்டி மற்றும் அல்லிநகரம் பகுதியில் சாலையோர ஆக்கிரமிப்புகள் அகற்றும் பணி கடந்த 2 நாட்களாக நடந்தன. ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்ட பகுதிகளில் வடிகால் தூர்வாரும் பணிகள் தொடங்கின. இந்த பணிகளை நகராட்சி அதிகாரிகள் பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.