< Back
மாநில செய்திகள்
தேனியில்  ஓய்வூதியர் குறைதீர்க்கும் கூட்டம்
தேனி
மாநில செய்திகள்

தேனியில் ஓய்வூதியர் குறைதீர்க்கும் கூட்டம்

தினத்தந்தி
|
15 July 2022 10:29 PM IST

தேனி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் ஓய்வூதியர் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடந்தது

தேனி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் ஓய்வூதியர் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடந்தது. மாவட்ட கலெக்டர் முரளிதரன் தலைமை தாங்கினார். இதில் ஓய்வூதியர்கள் பலர் கலந்துகொண்டு புதிய காப்பீடு திட்டத்தின் கீழ் செலவினை தொகையை திரும்பப் பெறுதல், மேல்முறையீடு மனுக்களுக்கு தீர்வு காணுதல் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து பேசினர். இதில் ஓய்வூதிய இணை இயக்குனர் கமலநாதன், மாவட்ட வருவாய் அலுவலர் சுப்பிரமணியன், மாவட்ட கலெக்டரின் நேர்முக உதவியாளர் (கணக்கு) முகமது அலி ஜின்னா மற்றும் பலர் கலந்துகொண்டனர்.

மேலும் செய்திகள்